கொல்கத்தா: கொல்கத்தாவில் மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெங்காலி சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான மஞ்சுஷா நியோகி என்பவர் வசித்து வந்தார். இவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் நடிகையின் சடலத்தை கைப்பற்றி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த 15 நாட்களில் மூன்று நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதால், தொலைகாட்சி மற்றும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.