கோவையில் கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கோவை மாவட்டத்தில் மதுக்கரை பாலத்துறை சந்திப்பு அருகே சேலம்-கொச்சி சாலையில் கார் மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்த முதியவரும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற சரக்கு வாகன ஓட்டுனர் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.