வாரணாசியின் ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக இந்துக்கள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற இந்து கோவிலுக்கான சின்னங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தைப் பிளந்து சேதப்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவிலில் உள்ள இந்து அடையாளங்களை மறைக்க கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பெயின்ட் பூசிமறைக்கப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.