தமிழக நிவாரணப்பொதிகள்: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமையடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வீதம் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட நிவாரணப்பொதி வழங்கப்படவிருப்பதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரண பொருட்களை; வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் ,அரச உயர் அதிகாரிகள், இணையவழி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.இந்த கலந்துரையாடலின் போதே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கவுள்ள நிவாரணப்பொதி குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமையடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வீதம் வழங்கவுள்ளதுடன், அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.