திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண் திவ்யா உட்பட 29 பேர் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நெய்குப்பி கிராமத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை உட்கொண்டதால் தான் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண் உட்பட 29 பேர் மயக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.