திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பெரியாண்டவர் நகரைச் சேர்ந்தவர் மனிஷா. கணவரை இழந்த இவர் தனது ஐந்து வயது மகளுடன் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மனிஷா கணவரின் சகோதரர் என கூறி அவரை மறுமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
மேலும், கட்சி பலத்தை பயன்படுத்தி காவல்நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்துவரும் நபர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனிஷாவின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.