மேற்கு வங்கத்தில் நடிகை பிதிஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தோழியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25ஆம் திகதி வங்காள நடிகையும், மொடலுமான பிதிஷா டி மஜும்தார்(21) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை பிதிஷாவின் தோழியும், மொடலுமான மஞ்சுஷா நியோகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக தொங்கிய மஞ்சுஷாவை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மஞ்சுஷாவின் தற்கொலை குறித்து அவரது தாயார் கூறுகையில்,
‘பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார்.
எப்போதும் அவரைப் பற்றியே பேசி கொண்டு இருந்தார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகவியலாளர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன். ஆனால், அதேபோன்று நடந்துள்ளது’ என வேதனை தெரிவித்தார்.
கடந்த 15ஆம் திகதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரிய வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து 2 தற்கொலைகள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.