நன்றி தமிழ்நாடு: பிரதமர் மோடி ட்வீட்!

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக
பிரதமர் மோடி
, ஹைதரபாத்தில் இருந்து மாலை 4.56 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமரை
முதல்வர் ஸ்டாலின்
வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதல்வர் ஸ்டாலின் பரிசளித்தார்.

அதன்பிறகு, அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து உரையாற்றினார். இதையடுத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “தமிழகத்துக்கு மீண்டும் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை பலமானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம்.” என்றார்.

இதையடுத்து, மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், “நன்றி
தமிழ்நாடு
! நேற்றைய வருகை நினைவுகூரத்தக்கது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிறிய காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.