உலகளவில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தால் அதிகளவிலான பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா, இந்தியா முதல் கொரியா, ஜப்பான் வரையில் வட்டி விகிதத்தை உயர்த்த உறுதியான முடிவை எடுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டுச் சந்தையின் நிலை தலைகீழாக மாறி வருகிறது, இதனால் சில ரீடைல் முதலீட்டாளர்கள் ஓவர்நைட்டில் வருட கணக்கில் சேர்த்து வைத்து லாபத்தை மொத்தமாக இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூன் நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி-யில் புதிதாக இரு நிர்வாக இயக்குநர்கள்.. யார் இவர்கள்..!
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி வருகிய ஜூன் 6-8 ஆம் தேதிகளில் தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இதேவேளையில் அமெரிக்கா, கொரியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் தனது வட்டி விகிதத்தைக் கொரோனாவுக்கு முந்தைய கால அளவீட்டுக்கும் அதிகமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே வட்டி விகித உயர்வைக் குறித்து உறுதி செய்துள்ள நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். வட்டி உயர்வு நிச்சயம் இருக்கும் ஆனால் இந்த உயர்வு கட்டாயம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்காது என்ற உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
பணவீக்க
இந்தியாவின் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்படும் வட்டி விகித உயர்வு மூலம் பங்குச்சந்தையை எவ்விதமான அதிர்ச்சியை அளிக்காது, இதேபோல் நாட்டின் வளர்ச்சி பாதையும் தடம் புரளாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.
வட்டி விகித உயர்வு
மத்திய அரசு தற்போது எரிபொருள் மீதான வரிக் குறைப்பு, உணவுப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் இந்திய சந்தை எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இதனால் ஜூன் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு கூடுதலான வட்டி விகித உயர்வு தேவைப்படாது என்றும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
RBI Rate hike will contain inflation without shocking Stock market
RBI Rate hike will contain inflation without shocking Stock market பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குக் குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!