சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலச்சந்தர் (34), பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். சிந்தாதரிப்பேட்டையில் நேற்று முன்தினம், 6 பேர் கொண்ட மரம் கும்பலால் பாலசந்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும், இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலை என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் எடப்பாடி பகுதியில் பதுங்கி இருந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசந்தருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கொலை நடந்த நேரத்தில், காவலர் தேநீர் அருந்த சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, பணியில் அலட்சியமாக இருந்த காரணத்திற்காக, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.