பெட்ரோல், டீசலை தொடர்ந்து மின் கட்டணத்திலும் கை வைக்கும் பாகிஸ்தான்.. இலங்கையை விட மோசமாகிடும்போல?

அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறிவிடுமோ என்ற எச்சரிக்கை பதிவுகளை பார்க்க முடியாது. இலங்கைபோலவே விலை வாசியானது எகிறி வருகின்றது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளது. சீனாவின் கடன் வலையிலும் கூட சிக்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தியுள்ளது.

ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

இதனால் பாகிஸ்தானில் லிட்டர் பெட்ரோல் விலை கிட்டதட்ட 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இழப்பு தான்

இழப்பு தான்

இது குறித்து பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு

மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு

இப்படி ஒரு நிலையில் பாகிஸ்தான் அரசு, லாபகரமான டிஸ்காம்களை தனியார்மயமாக்குவது தவிர, மின்சார கட்டணத்தினையும் 7 ரூபாய் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது சர்வதேச நாணயத்துடனான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளதாகவும், லாபகரமான டிஸ்கோகளை தனியார்மயமாகக நாணய நிதியம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நஷ்டத்தில் இயங்குன்ம் டிஸ்கோம்களை கருத்தில் கூறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 

வரலாறு காணாத உச்சத்தில் விலைவாசி
 

வரலாறு காணாத உச்சத்தில் விலைவாசி

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் டாலர்கள் கடனை விடுவிப்பதற்காக இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார பின்னடைவு காரணமாக, ஏற்கனவே பாகிஸ்தானில் எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணங்கள் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளன.

எப்போது முதல் ஏற்றம்

எப்போது முதல் ஏற்றம்

பாகிஸ்தானின் இந்த மின் கட்டண அதிகரிப்பானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை. ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானில் மேற்கொண்டு மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டால், மக்கள் மேற்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அடுத்த இலங்கையா?

அடுத்த இலங்கையா?

பாகிஸ்தான் கொரொனா பெருந் தொற்றுநோய், இறுக்கமான சர்வதேச நிதி நிலைமைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தாமதமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றால் இப்பிரச்சனை என்று கூறி வந்த நிலையில், இந்த நெருக்கடியான பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறது. பாகிஸ்தான் அடுத்த இலங்கையாக மாறமல் இருந்தால் சரி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Pakistan going to increase electricity tariffs following petrol and diesel?

Pakistani planning to increase electricity tariffs by 7 rupees in addition to privatizing profitable DISCOMs.

Story first published: Friday, May 27, 2022, 20:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.