பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மது கனி பொலிஸாரை கேட்டுக்கொண்டார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் ,  மக்களுக்கு அரசின் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இலகுவான முறையில் அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்று கொடுப்பது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலக மண்டப கேட்போர் கூடத்தில் இன்று (27) நடந்த கூடத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் மற்றும் அத்தியவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பொலிசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனையும் இங்கு  முன்வைக்கப்பட்டது.

 அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான செயல்திட்டங்களை அரச கொள்கை திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகவும், கிண்ணியா பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் முஸ்தபா நிவாஸ் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத், கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் ஏ. அஸ்வத் கான் கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. எம் எம் சௌபான் அவர்கள் மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்னான்டோ , பாதுகாப்பு படை பிரிவின் பொறுப்பதிகாரி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிண்ணியா பிரிவுக்கான பொறுப்பதிகாரி, வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிநிதி,இலங்கை மின்சார சபையின் கிண்ணியா பிரிவுக்கான பொறுப்பதிகாரி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை தலைவர், அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியத்தின் தலைவர்,ஆட்டோ சங்கம் மீனவர் சங்கம் உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள் தலைவர்கள் வர்த்தக சங்கம் பெட்ரோல் விற்பனையாளர்கள் சதோச நிறுவனத்தின் முகாமையாளர் பல்நோக்கு விற்பனை நிலையத்தின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.