முதுகில் குத்திய ஜாக் டோர்சி.. டிவிட்டருக்குப் பை பை..!

டிவிட்டர் நிறுவனம் தற்போது தனித்துவிடப்படும் மோசமான நிலையில் உள்ளது ஒருப்பக்கம் எலான் மஸ்க் டிவிட்டரை மொத்தமாக வாங்குவதாகக் கூறிவிட்டு Bot-களின் உண்மையான தரவுகள் இல்லாமல் ஒரு பைசா கூடத் தர முடியாது என நிற்கிறார்.

இதைத் தொடர்ந்து டிவிட்டர் சிஇஓ-வாக இருக்கும் பராக் அகர்வால் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி வருகிறார், இதனால் பலர் உயர் நிர்வாக அதிகாரிகள் வெளியேறத் துவங்கியுள்ளனர்.

இதற்கிடையில் தற்போது டிவிட்டர் நிறுவனத்தைத் துவங்கிய ஜாக் டோர்சி மொத்தமாக டிவிட்டரை விட்டும், டிவிட்டர் நிர்வாகக் குழுவை விட்டும் வெளியேறியுள்ளார்.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து மின் கட்டணத்திலும் கை வைக்கும் பாகிஸ்தான்.. இலங்கையை விட மோசமாகிடும்போல?

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்காக டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி மறைமுகமாகவும், வெளிப்படையாக உதவியுள்ளார் என டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜேசன் கோல்டுமேன் தெரிவித்துள்ளார். இவரது கருத்துத் தற்போது ஒட்டுமொத்த சமூகவலைத்தளத்தைப் புரட்டிப்போட்டு உள்ளது.

ஜேசன் கோல்ட்மேன்

ஜேசன் கோல்ட்மேன்

ஜேசன் கோல்ட்மேன் ஏப்ரல் 5 அன்று என்ன நடந்தது என்பதை விளக்கினார், டிவிட்டர் நிறுவனத் தலைவர் பிரட் டெய்லர் மற்றும் சிஇஓ பராக் அகர்வால் ட்விட்டரில் தனது பங்குகளை 14.9 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உடன் எலான் மஸ்க்-ஐ நிர்வாகக் குழுவில் இயக்குநராகப் பொறுப்பேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எலான் மஸ்க்
 

எலான் மஸ்க்

ஆனால் டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, ட்விட்டர் ஒரு தனியார் நிறுவனமாகச் செயல்படுத்துவதில் சிறப்பாகக் கவனம் செலுத்த முடியும் என்று தனது தனிப்பட்ட கருத்தைப் தெரிவித்தார். இது தான் எலான் மஸ்க்-ஐ டிவிட்டரை மொத்தமாகக் கைப்பற்ற ஊக்குவித்தது.

44 பில்லியன் டாலர்

44 பில்லியன் டாலர்

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் 54.20 டாலர் விலையில் மொத்தம் 44 பில்லியன் டாலர் மதிப்பில் டிவிட்டரை கைப்பற்றுவதாக அறிவித்துத் தற்போது பாட் பிரச்சனை நடந்துகொண்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனை எப்போது முடியும் எனத் தெரியாத நிவையில் டிவிட்டர் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நிர்வாகக் குழு

நிர்வாகக் குழு

இந்நிலையில் மே 25ஆம் தேதி டிவிட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மறு தேர்தலில் டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி நிற்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் மூலம் ஜாக் டோர்சி மொத்தமாக டிவிட்டரை விட்டும், டிவிட்டர் நிர்வாகக் குழுவை விட்டும் வெளியேறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Jack Dorsey really back stabbed Board; Jack Dorsey left Twitter board

Is Jack Dorsey really backstabbed Board; Jack Dorsey left Twitter board

Story first published: Friday, May 27, 2022, 20:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.