மேலும் ஒரு விளம்பர மாடல் கோல்கட்டாவில் தற்கொலை| Dinamalar

கோல்கட்டா,: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், மற்றொரு விளம்பர மாடல் நேற்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த விளம்பர மாடல் மற்றும் ‘டிவி’ நடிகை பிதிஷா மஜும்தார், கடந்த 25ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியும், விளம்பர மாடலுமான மஞ்சுஷா நியோகி என்பவர், கோல்கட்டாவின் பட்டுலி என்ற இடத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தோழி பிதிஷா இறந்த நாளில் இருந்தே கடும் மன அழுத்தத்தால் மஞ்சுஷா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அடிக்கடி அவரைப் பற்றி பேசி கதறி அழுததாகவும் அவரது தாய் தெரிவித்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.