விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நான்கு வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியாகும் படம் இது. அதோடு விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கமல் ரசிகர்களுக்கு இணையாக சூர்யா ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விக்ரம் படத்திற்கு மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் வசனம் எழுதியிருக்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில், இப்படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் அளித்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வலிமையானதாகவும் எனர்ஜிடிக்காகவும் இருக்கும். சூர்யா திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை கவர கூடியதாக இருக்கும். அவரது கெட்டப்பை நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.