இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை இந்திய அரசு வாங்குவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்த நிலையில். இந்த பங்குகளை வாங்குவதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்து லாபத்தை ஈட்டும் நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் உள்ளது.
சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார் அனில் அம்பானி.. செபி போட்ட உத்தரவு..!
வோடோபோன் பங்குகள்
இந்த நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக பயனாளர்கள் அதிகரித்து வருவதன் காரணமாக மும்பை பங்கு சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்திய அரசு முதலீடு
இந்த நிலையில் இந்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளது.
செபி அனுமதி
இதனையடுத்து வோடோபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி நிறுவனத்திடம் இந்திய அரசு விண்ணப்பம் செய்த நிலையில் தற்போது சிறப்பு அனுமதி மூலம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க செபி அனுமதி வழங்கியுள்ளது.
லாபம்
இந்திய அரசு வோடோபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதால் அதில் கிடைக்கும் லாபத்தின் மூலம் தனியார் வங்கிகளுக்கு சலுகை அளிக்க முடியும் என்றும், இதன்மூலம் வோடபோன் வாடிக்கையாளர்களும் பயன் பெறுவார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.
9 பக்க அறிக்கை
ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு வோடோபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதால் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்தவித கட்டுப்பாட்டையும் செய்ய முடியாது என்று செபி கூறியுள்ளது. இதுகுறித்து 9 பக்க அறிக்கையையும் செபி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளை இந்திய அரசு வாங்குவதால் வோடபோன் நிறுவனத்தின் நிதி நெருக்கடியும் சீராகும் என்று கூறப்படுகிறது.
SEBI approves Indian government to buy Vodafone Idea shares
SEBI approves Indian government to buy Vodafone Idea shares | வோடோபோன் பங்குகளை வாங்குகிறதா இந்திய அரசு? செபி தகவல்!