11 பெண்கள்… லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்


லண்டன் நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இரு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், இந்த 5 மாதங்களில் மட்டும் 11 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அனியா ஜெடர்கோவியாக் என்ற பெண்மணி ஈலிங்க் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார், மேலும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நியூஹாமில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மே 17 அன்று அதிகாலையில் அனியா கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஆனால் மருத்துவ உதவிக்குழுவினரால் அவரை மீட்க முடியவில்லை எனவும், சம்பவயிடத்திலேயே 34 வயதான அனியா ஜெடர்கோவியாக் மரணமடைந்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்

2021ல் லண்டன் நகரில் ஆண்களின் வன்முறைக்கு இலக்காகி மொத்தம் 24 பெண்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இதுவரை 11 பெண்கள் லண்டன் நகரில் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 2020 மற்றும் 2021ல் மட்டும் 19,000 பாலியல் குற்றச் சாட்டுகளை லண்டன் பொலிசார் புகாராக பெற்றுள்ளனர்.

மேலும் பலாத்காரம், வீட்டில் துஷ்பிரயோகம், பின்தொடர்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற புகார்களும் அதிகரித்துள்ளன.
ஜனவரி 24ம் திகதி Yasmin Chkaifi என்பவர், அவரது முன்னாள் துணையால் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்

ஜனவரி 30ம் திகதி Lesma Jackson என்பவர் சொந்த மகனால் கொடூரமக தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
கனேடிய இளம் பெண் Ashley Wadsworth பிப்ரவரி 1ம் திகதி அவரது காதலரால் கொல்லப்பட்டார்.

19 வயது உளவியல் மாணவி Sabita Thanwani கடந்த மார்ச் 17ம் திகதி பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் 22 வயது Maher Maaroufe என்பவர் கைது செய்யப்பட்டார்.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்

மார்ச் 24ம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் இரண்டு குழந்தைகளின் தாயாரான 40 வயது யாஸ்மின் பேகம் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஏப்ரல் 2ம் திகதி 80 வயதான Shotera Bibi என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் போலந்து நாட்டவரான 21 வயது Ania Jedrkowiak உட்பட மொத்த 11 பெண்கள் இந்த ஐந்து மாதத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.