வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட காதலை அடுத்து, திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
முன்பெல்லாம் திருமணத்திற்கு பெண் தேடுபவர்கள், பெண்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து திருமணம் முடித்தனர். ஆனால் இப்போதெல்லாம் பெண் கொடுத்தால் போதும் வேறெதுவும் தேவையில்லை என்ற நிலைக்கு வந்துள்ளது. பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஆண்களின் நிலையே இதற்கு காரணம். அப்படி இருக்கும் சூழலில், இத்தாலியை சேர்ந்த 19 வயது இளைஞர், 76 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞர், தான் திருமணம் செய்யவுள்ள 76 வயதான மூதாட்டியை நிச்சயித்துக்கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மூதாட்டிக்கு தனது காதலை வெளிப்படுத்திய புகைப்படத்தையும், தனது வருங்கால மனைவிக்கு அளித்த வைர மோதிரத்தின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், ‛இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் கிடைத்தால் போதும் என்றிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் 57 ஆண்டுகள் வித்தியாத்தில் மூதாட்டியாக இருந்தாலும் ஓகே என்ற ரீதியில் திருமணம் செய்துக்கொள்ளும் இருவரின் முடிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Advertisement