1947 ஆகஸ்ட் 16 பீரியட் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்
5/27/2022 3:46:53 PM
கவுதம் கார்த்திக் துடிப்பான நடிகராக இருந்தும், வலுவான சினிமா வாரிசாக இருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். அவரின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இயக்குகிறார். புதுமுகம் ரேவதி ஹீரோயின். படம் பற்றி இயக்குனர் பொன்குமார் கூறியதாவது: இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளாத அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை.
அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.