மும்பை : நாட்டில், 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி கடந்த, 2021 – 22ம் நிதியாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பாண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில், கரன்சி நோட்டுகளின் புழக்கம், 13 ஆயிரத்து 53 கோடியாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், 12 ஆயிரத்து 437 கோடியாக இருந்தது.கடந்த, 2020 மார்ச் நிலவரப்படி, 2,000 ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளின் புழக்கம், 274 கோடியாக இருந்தது. இது, 2021 மார்ச்சில், 245 கோடியாகவும், 2022 மார்ச்சில், 214 கோடியாகவும் குறைந்துள்ளது.அதே சமயம், 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த, 2021 மார்ச் நிலவரப்படி, 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை, 3,867 கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டு மார்ச்சில், 4,554 கோடியாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், மொத்தம் புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு, 28.27 லட்சம் கோடியில் இருந்து, 31.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த கரன்சி மதிப்பில், 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 87சதவீதமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement