திருப்பதி:
ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடந்தது.
மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே பல லட்சங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.இதையடுத்து அவரையும் பிரிந்துவிட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
3-வதாக வேதம் செல்ல அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்த மகேஸ்வரர் ரெட்டி என்பவரின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். மனைவி இறந்து விட்டதால் மகேஸ்வர் ரெட்டி திரிஷாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திரிஷா பெயரில் பேங்க் அக்கவுண்டில் ரூ 5 லட்சத்தை மகேஸ்வர் ரெட்டி டெபாசிட் செய்தார். இதையடுத்து இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே மகேஷ்வர் ரெட்டி வீட்டிற்கு வந்த திரிஷாவின் தாயார் மேரம்மா, தனது மகள் பெயரில் வீடு நிலங்களை பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே திரிஷா உன்னுடன் குடும்பம் நடத்துவார். இல்லை என்றால் திரிஷாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக மகேஸ்வர ரெட்டியிடம். தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த மகேஸ்வர் ரெட்டி திரிஷா குறித்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினார். விசாரணையில் திரிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து திரிஷா அவரது தாயார் குறித்து வேதன் சர்லா போலீசில் மகேஸ்வர் ரெட்டி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திரிஷா மற்றும் அவரது தாயாரை தேடி வருகிறார்.