7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்திய பங்குச்சந்தை..!

கொரோனா தொற்று பாதிப்பு, பணவீக்கம், சப்ளை செயின் பாதிப்பு, ரஷ்யா – உக்ரைன் போர், எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பாதிப்பு, சீனாவின் லாக்டவுன், உற்பத்தி மூலப்பொருட்கள் பாதிப்பு, வட்டி விகித உயர்வு, நாணய மதிப்பில் பெரும் தடுமாற்றம் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பங்குச்சந்தை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் NSDL தரவுகள் ரீடைல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. என்ன நடந்தது..?

16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை கொடுத்த நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்

கடந்த எட்டு மாதங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) சற்றும் எதிர்பார்க்காத முதலீட்டு வெளியேற்றம் மூலம் இந்திய பங்குகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் இப்பிரிவு முதலீட்டாளர்கள் செய்த மொத்த முதலீட்டையும் மாயமாக்கியுள்ளது.

என்எஸ்டிஎல் அமைப்பு

என்எஸ்டிஎல் அமைப்பு

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) அமைப்பின் தரவுகள் அடிப்படையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் 2021 முதல் அதாவது 8 மாத காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அல்லது 32 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

2.2 லட்சம் கோடி ரூபாய்
 

2.2 லட்சம் கோடி ரூபாய்

இதில் என்ன இருக்கிறது என நினைப்பவர்களுக்கான முக்கிய தகவல் இது. 2014 முதல் 2020 வரையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) மொத்தமாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யது 2.2 லட்சம் கோடி ரூபாய். இந்த 7 வருட முதலீட்டை வெறும் 8 மாதத்தில் வெளியேறியுள்ளது.

மோடி 7 வருட ஆட்சி

மோடி 7 வருட ஆட்சி

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 2010 முதல் 2020 வரையில் முதலீடு செய்யப்பட்ட 4.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 50 சதவீதம் மாயமாகியுள்ளது. இதன் மூலம் மோடி அரசின் 7 வருட ஆட்சி காலத்தில் பங்குச்சந்தையில் பெற்ற முதலீடுகள் கடந்த 8 மாதத்தில் வெளியேறியுள்ளது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) முதலீட்டு வெளியேற்றத்திற்கு முக்கியமான காரணம் உலக நாடுகளில் அதிகரித்து வரும் வட்டி விகிதம், வல்லரசு நாடுகளில் நிலவும் மோசமான பணவீக்கம், ஐரோப்பிய சந்தையில் உருவான அரசியல் மற்றும் வர்த்தக பிரச்சனைகள், அனைத்தை விடவும் முக்கியமான இந்திய பங்குகள் அதிகப்படியான விலையில் மதிப்பிடப்படும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய பங்குகள் மீது விருப்பம் குறைந்தது.

தைவான் மற்றும் தென் கொரியா

தைவான் மற்றும் தென் கொரியா

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றம் இந்தியாவில் மட்டும் இல்லை, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளிலும் உள்ளது. இந்த மோசமான நிலை அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7 years FPI investments in Indian equities lose in 8 months

7 years FPI investments in Indian equities lose in 8 months 7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்தியப் பங்குச்சந்தை..!

Story first published: Friday, May 27, 2022, 11:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.