Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
IPL 2022: 2வது குவாலிஃபயர் போட்டியில் வெல்ல போவது யார்?
ஐ.பி.எல் போட்டியின் 2-வது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளை ராஜஸ்தான் அணி சந்தித்துள்ளது. இதேபோல் பெங்களூரு அணி இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. கடந்த 24-ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், முன்னாள் சாம்பியான ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
இன்று நடைபெறும் போட்டியில், வெற்றி பெறும் அணி, குஜராத்துடன் இறுதி போட்டியில் மோத உள்ளது.
ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக வியாழன் அன்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்.. மோடி!
சென்னையில் வியாழன் மாலை நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பேசினார்.
Tamil News Latest Updates
கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம்.. மு.க.ஸ்டாலின்!
கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம், ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இழப்பீடு காலத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மதுரை – தேனி ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார் நிலையில் மதுரை-தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை – தேனி இடையிலான ரயில் கட்டணத்தொகை ரூ. 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்த மாபெரும் தலைவருக்கு சிலை திறப்பதை எண்ணி மகிழ்கிறேன், நெகிழ்கிறேன்! சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Congress leaders pay floral tribute to India’s first Prime Minister Jawaharlal Nehru on his death anniversary, at his memorial Shanti Van in New Delhi pic.twitter.com/B4KBfbitat
— ANI (@ANI) May 27, 2022
இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
செசபிள் மாஸ்டர் ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் தோல்வியை தழுவி, இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும். சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.