Work From Home-க்கு ஏற்ற 10 சிறந்த நகரங்கள்; Kisi நிறுவனத்தின் அறிக்கை! | PhotoStory

வாழ்விற்கும் வேலைக்குமான சமநிலை குறித்து ஆய்வுசெய்த தொழில்நுட்ப நிறுவனமான Kisi வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கேற்ற 10 சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் (52.06%)

தொழில்நுட்ப நிறுவனமான Kisi வெளியிட்டிருக்கிற அறிக்கை வீட்டிலிருந்தே பணி செய்யப் போதுமான வசதிகளையும் வேலைவாய்ப்புகளை வழங்குகிற நகரங்களையும் சதவிகித அடிப்படையில் வரிசைப்படுத்தியிருக்கிறது.

வாஷிங்டன் (49.77%)

சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் இடம்பெற்றிருக்கிறது.

ஆஸ்டின் (45.51%)

மூன்றாவது இடத்தில் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகரமான ஆஸ்டின் இடம்பெற்றிருக்கிறது.

பெர்ன் (44.86%)

Aare நதியின் வளைவில் அமைந்திருக்கிற சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரம் பெர்ன். இது பழமையான நகரம் கூட.

ஜூரிச் (44.86%)

சுவிட்சர்லாந்து நாட்டின் வடக்கில் அமைந்திருக்கும் நகரம் ஜூரிச். அந்நாட்டின் பொருளாதார தலைமையிடமாக ஜூரிச் திகழ்கிறது.

ஜெனிவா (44.86%)

இதுவும் சுவிட்சர்லாந்து நாட்டின் நகரம் தான். வங்கி மற்றும் நிதி சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்ற நாடு சுவிஸ். இதன் தொழில்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

சான் பிரான்சிஸ்கோ (44.76%)

சுவிஸ் நகரங்களுக்குப் பிறகு இந்த வரிசையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் இடம்பெற்றிருக்கிறது. 44.76 பணிகளை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியை இந்நகரம் கொண்டிருக்கிறது.

பாஸ்டன் (44.35%)

அமெரிக்காவின் பாஸ்டன் நகரம் இந்தப் பட்டியலில் 7-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. புதிய இங்கிலாந்து என அழைக்கப்பட்ட அமெரிக்காவின் பகுதிகளில் பாஸ்டன் நகரம் இடம்பெற்றிருக்கிற மாசசூசெட்ஸ் மாகாணமும் ஒன்று.

ஸ்டாக்ஹோம் (44.20%)

ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோம் 14 தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஐரோப்பாவில் கொஞ்சம் காஸ்ட்லியான நகரம் இது.

லிவர்பூல் (43.50%)

வடமேற்கு ஐரோப்பாவில் புகழ்பெற்ற வணிக நகரமாகவும் துறைமுகமாகவும் 18-ம் நூற்றாண்டில் இருந்து திகழ்கிற நகரம் டெக் அப்டேட்டிலும் முன்னணியில் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.