சியோமி
நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி பேட் 6 பிளாக்ஷிப் மீடியாடெக் புராசஸருடன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நிறுவனம் சியோமி பேட் 5 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் புராசஸருடன் வெளியான சியோமி பேட் 5, சந்தையில் திறன்வாய்ந்த குறைந்த விலை டேப்லெட்டாக பார்க்கப்பட்டது.
Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா!
சியோமியின் புதிய டேப்லெட்
Xiaomiui அறிக்கையின்படி,
Xiaomi Pad 6
ஆனது, நிறுவனத்தின் டேப்லெட் வரிசையில் அடுத்த தயாரிப்பாக இருக்கும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இது சீனாவில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
வெளியீட்டு தேதி குறித்து தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும், ஆகஸ்ட் மாதம் இது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. ஏனென்றால், சான்றிதழ் பதிவு தளத்தில் இந்த டேப்லெட்டின் குறியீடு காணப்படுகிறது.
சியோமி பேட் 6 தகவல்கள்
அதாவது, Xiaomi Pad 6 டேப்லெட்டுக்கு Eurasian Economic Union சான்றிதழ் இணையதளத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த சந்தைகளில் வெளியிடுவதற்கான கட்டுப்பாட்டாளரிடமிருந்து அனுமதி பெறும் முனைப்பை உறுதிசெய்கிறது.
இரண்டாவதாக பதிவு தளத்தில் 22081283G என்ற குறியீட்டு எண்ணுடன் இந்த டேப்லெட் காணப்பட்டது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் தோராயமான வெளியீட்டு தேதியைக் குறிப்பதாக இருக்கிறது. எனவே, 2208 என்பது ஆகஸ்ட் 2022 என்று பொருள்படும்படி இருக்கிறது.
Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!
Xiaomi Pad 6 டேப்லெட் ஆனது, MediaTek புராசஸரைப் பயன்படுத்தும் முதல் பிரீமியம் டேப்லெட் என்பது குறிப்பிடத்தக்கது. Xiaomi இதுவரை அதன் முதன்மை டேப்லெட்களில் Qualcomm புராசஸர்களையே பயன்படுத்தியுள்ளது. மேலும் குறைந்த விலையில் பீரிமியம் டேப்லெட்டுகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நிறுவனம் இந்த ஆண்டு குறைந்தது நான்கு டேப்லெட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. L81, L81A, L82 மற்றும் L83 ஆகிய நான்கு மாடல்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்திலும் Xiaomi பிராண்டிங் இருக்காது. இவற்றில் ஒன்று ரெட்மி டேப்லெட்டாக இருக்கலாம் என்றும் அறிக்கைகள் தெரிக்கின்றன.
Redmi 10: விரைவில் இந்தியா வரும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் பட்ஜெட் 5ஜி போன்!
சியோமி பேட் 5
இப்போதைக்கு,
Xiaomi Pad 5
இந்திய சந்தையில் உறுதியான கால்தடத்தைப் பதித்துள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi Pad 5 ஆனது Apple iPad Pro மற்றும் Samsung’s Galaxy Tab S8 ஆகியவற்றுக்கு போட்டியாக சந்தையில் வலம்வருகிறது. இவை இரண்டும் அதிக விலை கொண்டவை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ஆனால், சியோமியின் பேட் 5 பிரீமியம் டேப்லெட்டின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது. இதனுடன் டால்பி விஷன், டால்பி அட்மாஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட், ஸ்டைலஸுக்கான ஆதரவு, வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரியுடன் 2.5K டிஸ்ப்ளே போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.