கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’.. என்ற கேஜிஎஃப் பாடல் ஒலித்தது பார்வையாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்தது.
சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் முதன்முறையாக சென்னையில் சிலை கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்புக்கு பின் கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, கருணாநிதி குறித்த காணொளி திரையிடப்பட்டது. அந்த காணொளியின் பின்னணியில் கேஜிஎஃப் படத்தின் ’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’ பாடல் வரிகளும்.. படத்தின் மிரட்டலான பின்னணி இசையும் ஒலிக்கப்பட்டது. அந்த காணொளியில் கருணாநிதி செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினி காந்த், நாசர் உள்ளிட்டோரும் கவிஞர் வைரமுத்துவும் வருகை புரிந்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM