சென்னை: அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயடு பேசியுள்ளார். இந்தியாவின் பெருமை மிக்க முதல்வர்களில் கலைஞரும் ஒருவர். கலைஞரின் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர்; நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர் எனவும் அவர் பேசியுள்ளார்.