அமெரிக்க துப்பாக்கிச் சூடு: இளைஞரின் பகீர் பின்னணி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் Robb Elementary School எனும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 25ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள் குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலை செய்த 18 வயதான இளைஞர்
சால்வடர் ராமோஸ்
என்பவர், பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் தொடக்க பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய சால்வடர் ராமோஸ் பின்னணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சால்வடர் ராமோஸுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்கள் உள்பட பல்வேறு நபர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்ததாக அவரது முன்னாள் நண்பர் ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுதவிர உளவியல் சிக்கலும் அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘எல்லாத்துக்கும் இவர் தான் காரணம்’ – போட்டுடைத்த பாக். பிரதமர்!

சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். போதைப்பழக்கத்துக்கு அடிமையான அவரது தாயார், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும், தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் அவர் வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் கேலி, கிண்டலுக்கு ஆளாவதாக கூறி தனது பாட்டியிடம் தெரிவித்து படிப்பை பாதியிலேயே நிறுத்தியும் உள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். அதன்பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, தனது பாட்டியையும் அவர் சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பான தகவலை தனது முகநூல் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.