இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று (28) நுவரெலிய மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு ,நுவரெலிய மாவட்ட செயலாளர திரு.நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட மனிதாபிமான உதவிகளின் முதல் தொகுதி நானுஓயா புகையிரத நிலையத்தில் மாவட்ட செயலாளரினால் பொறுப்பேற்கப்பட்டது. நுவரெலியா பிரதேச செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளுக்கு உட்பட்ட வறிய மக்களுக்கு வழங்குவதற்காக தோட்ட நிருவாங்களிடம் கையளிக்கப்ட்டன.
இந்திய உதவியின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 1750 மெற்றிக் தொன் அரிசியும் 21 மெற்றிக் தொன் பால் மாவும் வழங்கப்படவுள்ளன. நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கேத்தே மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பப்படவுள்ளன.