மாஸ்கோ: 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
ஒலியை விட 9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், பேரண்ட்ஸ் கடலில் இருந்து இன்று(மே 28) ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வகையான ஏவுகணை பரிசோதனை ரஷ்யாவின் ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் சிவியரோ டோனெட்ஸ்க், லிசியான்ஸ்க் நகரினை குறிவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ: 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.nsimg3040242nsimgஒலியை விட 9 மடங்கு வேகத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.