வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு,-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி, நேற்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல பிரச்னைகளால் தத்தளித்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏப்., 9ல் அவர்கள் கோத்தபய ராஜபக்சே அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அமைதி யாக போராடியவர்கள் மீது மே 9ம் தேதி மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்.
அப்போது வெடித்த வன்முறையில், 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பல கட்சிகள் ஆதரவுடன் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.எனினும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வருகிறார். அவருக்கு எதிராக நடந்து வரும் போராட்டம், நேற்று, 50வது நாளை எட்டியுள்ளது. இது குறித்து போராட்டக் குழு அமைப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துஉள்ளோம். கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்றார்.
காப்பீட்டு நிறுவனத்திற்கு நெருக்கடி
இலங்கையின் கொழும்பு நகரில், மே 9ல் போராட்டக்காரர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்கினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரங்கள், ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ஆளுங்கட்சி பிரமுகர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சேதங்களால் காப்பீட்டுதாரர்களுக்கு, இலங்கை அரசின், என்.ஐ.டி.எப்.பி., எனப்படும் தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியம், 457 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ‘பிட்ச்’ நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, இந்த இழப்பீடு கூடுதல் சுமையை அளித்துள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில், மே 9ல் போராட்டக்காரர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்கினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரங்கள், ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ஆளுங்கட்சி பிரமுகர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.இந்த சேதங்களால் காப்பீட்டுதாரர்களுக்கு, இலங்கை அரசின், என்.ஐ.டி.எப்.பி., எனப்படும் தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியம், 457 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ‘பிட்ச்’ நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, இந்த இழப்பீடு கூடுதல் சுமையை அளித்துள்ளது.
Advertisement