அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் தாக்கம் மற்ற நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளதை கனடாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உறுதிசெய்துள்ளது எனலாம்…
ரொரன்றோவில், பள்ளிகள் அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் திரிவதாக தகவல் கிடைத்ததையடுத்து, பள்ளி ஒன்றின் அருகே 27 வயது நபர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ஒரு pellet gun (பறவைகளை சுடும் துப்பாக்கி என்று வைத்துக்கொள்ளலாம், ஆனாலும், அவையும் ஆபத்தானவைதான்) என்று கூறப்படுகிறது.
அத்துடன், பொலிசார் அவரை சுடும்போது அவர் கையில் துப்பாக்கி இருந்ததா, அல்லது பொலிசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டி அவர் மிரட்டினாரா, அல்லது பள்ளியில் தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்தாரா என்பது குறித்து பொலிசார் விவரங்கள் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்டவர் குறித்த விவரஙங்களை வெளியிட அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.