கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன் – வெங்கையா நாயுடு

Deputy President Venkaiah Naidu Speech In Kalaignar Statue Opening : ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது 1.70 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து இந்நிழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில்,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. என் இளம் வயதில் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டுள்ளேன். என்னுடைய பொதுவாழ்வில் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையான உறவு.

பன்முகத்திறமை, அர்ப்பணிப்பு உழைப்பு என்று பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி. இந்தியாவின் பெருமைமிகு முதல்வர்களில் ஒருவரான கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர். எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன்.

சொலல் வல்லன் சோர்விலன் அவனை

இகழ்வெல்லல் யாருக்கு அரிது

என்ற குரக்கு கருணாநிதி பொருந்தக்கூடியவது. அவர் தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தார். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று மக்களை நடுநாயமாக கொண்ட அரசியலை முன்னெடுத்த பெருமைக்குரியவர் கருணாநிதி.

மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழ்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாட்டின் சிறப்ப. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் தாய் நாடு தாய் மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது.

நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு ஆதரவானவன். தாய் மொழியே உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். சென்னை எனது இதயத்தோடு நெருக்கமான மாநகரம் என்றும் கருணாநிதியின் வழி நின்று தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார்  என்றும் கூறியுள்ளார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.