காபி போடுவதற்கு பால் வாங்க கடைக்கு சென்று கோடீஸ்வரனாக திரும்பிய இளைஞன்! நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்



அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கடைக்கு சென்ற காரணத்தால் நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

செஸ்டர் கவுண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் வீட்டில் காபி குடிக்க நினைத்த போது பிரிட்ஜில் பால் இல்லாமல் இருப்பதை கண்டார்.

இதையடுத்து நடந்த ஆச்சரியத்தை அவரே சொல்கிறார்.
பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றேன். அப்போது கவுண்டரில் பவர்பால் லொட்டரி டிக்கெட் குறித்த விளம்பரம் இருந்தது.

எச்சில் இலையை திறந்து பார்த்ததால் கோடிகளில் கொட்டிய பணம்! இலங்கை, லண்டன் மற்றும் உலகெங்கும் சாதித்த தமிழர்

அதை வாங்கினேன்.
அடுத்தநாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன், ஆம் அந்த லொட்டரியில் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ 70 கோடிக்கு மேல்) பரிசு என விழுந்திருந்தது.

இதையடுத்து இன்ப அதிர்ச்சியில் நான் உறைந்துவிட்டேன்.
உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.