கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மொத்தமாக 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனந்தாஸ் குழுமத்தின் நிறுவனர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.