கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் லட்சுமிபுரம் மற்றும் வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஆனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.