சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது. வாடகை கார் டிரைவரான இவர் காரில் பாலக்காடு சென்றுவிட்டு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது தூக்கம் வந்ததால் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.
அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்தது. இதனை கண்ட பீர்முகமது உடனடியாக காரில் இருந்து வெளியேறினார். தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தார். அதற்குள் கார் தீயில் எரிந்து நாசமானது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடிதீயை அணைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.