சென்னை:
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழையும். 30, 31, 1-ந் தேதியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்ப நிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.