தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் இரவு ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குழந்தை யாருடையது? அது எப்படி இறந்தது? குழந்தையின் மீது மை பூசி இருந்தால் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.