Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று நாம் இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.
அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய அரசியல் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி:
பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியிருந்தார். அதில் அவர், “இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த நிகழ்வை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை மீம்ஸ்:
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைத்துப் பேசினார்.
பிரதமரின் உரையைத் தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு என்பதை அழுத்தத்துடன் பதிவு செய்ததுடன் நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி மற்றும் கச்சத்தீவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதள பக்கங்களில் பாராட்டப்பெற்றது. மேலும் இதுதொடர்பாக மீம்ஸ்களும் பகிரப்பட்டன.
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். அதுகுறித்து மீம்ஸ்கள் நேற்று முன்தினம் முதல் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil