பாட்டியாலா: 34 ஆண்டுகளுக்கு முன், காருக்கு வழிவிடுவது தொடர்பான பிரச்சினையில் முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து சித்து கடந்த திங்கட்கிழமை பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறை அதிகாரிகள் கூறும்போது, “சித்துவின் கைதி எண் 241383 ஆகும். அவர் ஏழாவது சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தனது அறையிலிருந்தே பணியாற்றுவார். கோப்புகள் அவரது அறைக்கே அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.