பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வான் டர் டசனின் மனைவி லாரா, அதிரடியில் மிரட்டிய பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்வதாக கிண்டலாக கூறியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். சதம் விளாசிய அவர், சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

ரசிகர்களோடு, மற்றோரு ராஜஸ்தான் அணி வீரர் வான் டர் டசனின் மனைவி லாராவும் அவரது ஆட்டத்தை கொண்டாடினார்.

ஒவ்வொரு முறையும் வீரர்கள் சிக்ஸர் அல்லது ஒரு மைல்கல்லை எட்டும்போது, ரசிகர்கள் கூட்டத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்களை கமெராவில் காட்டுவது வழக்கம்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி

Photo Credit: BCCI/IPL

அதேபோல் நேற்றைய போட்டியில் பட்லர் சிக்ஸர்களை பறக்கவிடும் போது லாரா கமெராவில் காட்டப்பட்டார். அவர் ராஜஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிசர்ட் அணிந்திருந்ததால், ரசிகர்கள் அவரை பட்லரின் மனைவி என தவறாக நினைத்துள்ளனர்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த லாரா, இரண்டாவது கணவராக பட்லரை ஏற்றுக் கொள்கிறேன் என கிண்டலாக கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர் சிக்சர் அடிக்கும் போது நான் சில முறை கமெராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன்.

மேலும் தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறோம், எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஒருவேளை என்னை அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இது மிகவும் சுவாரசியமானது.

ரஸ்ஸி (வான் டர் டசன்) ஐபிஎல்லில் அதிகம் விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை. அதனால் ஜோஸுக்கான உற்சாகத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்பேன்’ என தெரிவித்தார்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி

Photo Credit: BCCI/INSTAGRAM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ.1 கோடியில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட வான் டர் டசன், இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2வது தகுதிச் சுற்றில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி

Photo Credit: TWITTER



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.