மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இரண்டு நாள் “பலாப்பழ மேளா” இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹிரியட்கா நகரில் இருக்கும் வீரபத்ர சாமி கோயில் வளாகத்தில் இந்த மேளா நடைபெறுகிறது. இதில், பலாபழத்தின் ரகங்கள், பழத்தைக் கொண்டு தாயரிக்கப்படும் உப பொருள்கள், பலா மரக்கன்றுகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல பலாப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் அங்கேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பலாப்பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இந்த ஆண்டு பலாப்பழ இட்லி, பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் “மங்களூரு பன்”, பலாப்பழ போலி போன்றவை அங்கேயே தயாரிக்கப்பட்டு சூடாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை பலாப்பழ சீசன் இருக்கும். பருவமழை தொடங்கியதும் பழத்தின் சுவை மற்றும் மகசூல் பாதிக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பலாப்பழ மேளா இந்தாண்டு சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடக்கிறது.
தோட்டக்கலைத் துறை, விவசாய பல்கலைக் கழகங்களின் உறுதுணயுடன் நடைபெறம் இந்த மேளாவை சவாயவ க்ரிஷிகா கிரஹகா பலகா மற்றும் பிரணவ சௌஹர்த சககாரி லிமிடெட் ஏற்பாடு செய்திருந்தது.