பெங்களூரு : பழைய பஸ்களை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய, பி.எம்.டி.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெங்களூரு பி.எம்.டி.சி.,நிர்வாகம் ஒன்பது லட்சம் கி.மீ.,க்கு மேல் ஓடிய, பழுதான பஸ்களை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது.இதை அறிந்த தென்மேற்கு போக்குவரத்து கழகம் நிர்வாகத்தினர் அதை தங்களுக்கு அளிக்குமாறு கேட்டுள்ளனர்.
பழைய பஸ்களை சரி செய்து, நாங்கள் ஓட்டி கொள்கிறோம். எலும்பு கூடு போல இருந்தாலும் சரி. ஒரு பஸ்சுக்கு 50 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என கூறி உள்ளனர்.இதற்கு பி.எம்.டி.சி., நிர்வாகமும் ஒப்பு கொண்டுள்ளது. இந்த பஸ்களை கிராம பகுதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் எழுந்துள்ளது.ஏற்கனவே, ஓட்ட முடியாத நிலையில் தான் பஸ்களை பழைய இரும்பு கடைக்கு போட முடிவு செய்துள்ளனர்.இதை வாங்கி சென்று கர்நாடகாவின் கிராமங்களில் ஓட்டினால் எப்படி; பெங்களூரிலேயே அடிக்கடி பழுதாகி நிற்கிறது; தீப்பிடித்து எரிகிறது. அப்படி இருக்கும்போது அங்கும் மட்டும் சரியாக ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட தென்மேற்கு போக்குவரத்து கழகம் உட்பட அரசு போக்குவரத்து கழங்களில் ஓய்வு பெற்ற டிரைவர், கண்டக்டர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.ஒரு பக்கம் பழைய பஸ்கள்; மறுபக்கம் முதிய ஓட்டுனர்களை வைத்து இயக்கினால் எப்படி சரியாக இருக்கும் என பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.
Advertisement