பிரமாண்டமாக நடைபெறவுள்ள “தி லெஜண்ட்” படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா!

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்”.

சரவணனின் 'தி லெஜெண்ட்' : 'மோசலோ மொசலு' பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி  | directors Mani Ratnam, rajamouli, sukumar releasing Mosalo Mosalu from  The Legend Saravanans the legend movie ...

ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் “மொசலோ மொசலு -வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான “வாடி வாசல்” சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதுவும் ஒரு கோடி பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Saravanan Arul starring 'Legend' audio launch- 10 top actresses to attend  the function!

“ஜனரஞ்சக கலைஞன்”, “சின்னக் கலைவாணர்” என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்பதே படத்தின் மையக்கதையாகும்.

This is Vivek's last film .. Legend Saravana Photos Going Viral! - The Post  Reader

இதையடுத்து “தி லெஜண்ட்” படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

Following 'Vikram', Saravanan Arul's 'The Legend' to have a grand trailer  and audio launch on this date! | Tamil Movie News - Times of India

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.