பிரித்தானியாவில் 35 ஆண்டுகளாக பெண் நோயாளிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக இந்திய வம்சாவளி மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா சிங் என்ற 72 வயதான மருத்துவர் ஸ்காட்லாந்தின் வடக்கு லனார்க்ஷயரில் மருத்துவராக உள்ளார்.
கிருஷ்ணாவிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது, தவறாக பேசுவது போன்ற பாலியல் தாக்குதல்களை அவர் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
35 ஆண்டுகளுக்கு மேலாக 47 பெண் நோயாளிகளிடம் அவர் இப்படி தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
newsstv
தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் மறுத்த போதிலும் ஆதாரங்களுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்றம் கிருஷ்ணாவிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று முன் தினம் தீர்ப்பளித்துள்ளது.
பெண் நோயாளிகள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துள்ளார் கிருஷ்ணா என தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 1983ல் இருந்து 2018ஆம் ஆண்டு வரையில் இது போன்ற தவறான செயல்களில் கிருஷ்ணா ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
glassgowtimes