புனே:
மகளிருக்கான 4-வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வந்தது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெலாசிட்டி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டாட்டின் 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் அடித்தார்.
இதை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் நோவாஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்…ஆசிய கோப்பை ஹாக்கி – ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா