புதுடில்லி : வழக்கறிஞர்கள் மீதான புகார்களின் விசாரணை குறித்து பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய மாநில ‘பார் கவுன்சில்’களின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு, இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், அனைத்து மாநில பார் கவுன்சில்களில் நிலுவையில் உள்ள வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து இந்திய பார் கவுன்சில், அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் வலியுறுத்திஇருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத மாநில பார் கவுன்சில்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, அனைத்து மாநில பார் கவுன்சில்களும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றினவா என்பது குறித்து விரிவான அறிக்கையை, ஜூலை 1௪க்குள் தாக்கல் செய்யும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த அறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காதது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாநில பார் கவுன்சில் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
Advertisement