ரஷ்ய எரிவாயு தொழிற்சாலை பங்குகளை வாங்கும் இந்தியா..? பிரிட்டன் நிறுவனத்திற்கு வாழ்வு தான்..!!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் அடுத்தடுத்து விதித்த தடையின் காரணமாக அடுத்தடுத்து வெளியேறியது. அப்படி ரஷ்யாவை விட்டு வெளியேற முடிவு செய்த முக்கியமான நிறுவனங்களில் Shell மிகவும் முக்கியமானது.

இதற்கு முக்கியக் காரணம் பிற நிறுவனங்களைக் காட்டிலும் ஷெல் நிறுவனம் அதிகளவிலான முதலீடு செய்து பல முக்கியமான நிறுவனங்களில் பங்குகளையும் வைத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஷெல் நிறுவனத்தின் வெளியேற்றம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.

புடின் அறிவிப்புக்கு வளைந்த நாடுகள்.. ரஷ்ய ரூபிள் மதிப்பு 7 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்வு!

ரஷ்யா

ரஷ்யா

உலக நாடுகளின் தடையில் இருந்து ரஷ்யா மீண்டு வர முடியாத நிலையில் அந்நாட்டில் இருக்கும் சர்வதேச நிறுவனங்கள் வேக வேகமாக வெளியேறி வருகிறது. அப்படி வெளியேறி வரும் நிறுவனங்கள் அந்நாட்டில் கிடைத்த, வருவாய், லாபம், முதலீடு, தொழிற்சாலை, கடைகள் என அனைத்தையும் மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறுகிறது.

Shell நிறுவனம்

Shell நிறுவனம்

இந்த நிலையில் உலகின் முன்னணி எரிபொருள் விற்பனை நிறுவனமான Shell, ரஷ்யாவின் Sakhalin-2 LNG தொழிற்சாலையில் வைத்திருக்கும் 27.5 சதவீத பங்குகளை அப்படியே விட்டு விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் எப்படியாவது இதைப் பணமாக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளது.

ONGC விதேஷ், கெயில் நிறுவனங்கள்
 

ONGC விதேஷ், கெயில் நிறுவனங்கள்

இந்த முயற்சியில் பிரிட்டன் நாட்டிற்கும், ரஷ்யாவுக்கும் நட்பு நாடாக விளங்கும் இந்தியா உடன் டீல் பேச துவங்கியுள்ளது பிரிட்டன் நாட்டின் ஷெல் நிறுவனம். ரஷ்யாவின் Sakhalin-2 LNG தொழிற்சாலையில் பிரிட்டன் Shell வைத்திருக்கும் 27.5 சதவீத பங்குகளை இந்தியாவின் ONGC விதேஷ் மற்றும் GAIL நிறுவனத்திடம் விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கி உள்ளது.

Sakhalin-2 LNG தொழிற்சாலை

Sakhalin-2 LNG தொழிற்சாலை

உலக நாடுகளின் தடைக்குப் பின்பும் இந்தியா ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியா ரஷ்யாவின் ஏற்கனவே பல எரிவாயு, கச்சா எண்ணெய் திட்டங்களில் முதலீடு செய்துள்ள வேளையில் Sakhalin-2 LNG தொழிற்சாலையின் 27.5 சதவீத பங்குகள் கூடுதல் ஆதிக்கத்தையும் வாய்ப்பையும் இந்தியாவுக்கு ரஷ்யாவில் கிடைக்கும்.

இந்தியா - ரஷ்யா

இந்தியா – ரஷ்யா

ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ள நிலையில் LNG பிரிவிலும் புதிய வர்த்தக வாய்ப்பும், லாபமும் கிடைக்க உள்ளது. இந்தியாவின் பல்வேறு முதலீடுகள் மூலம் ரஷ்யாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஈவுத்தொகை பெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Britain Shell in talks with ONGC Videsh, GAIL to sell Russian Sakhalin-2 LNG plant stake

Britain Shell in talks with ONGC Videsh, GAIL to sell Russian Sakhalin-2 LNG plant stake ரஷ்ய எரிவாயு தொழிற்சாலை பங்குகளை வாங்கும் இந்தியா..? பிரிட்டன் நிறுவனத்திற்கு வாழ்வு தான்..!!

Story first published: Friday, May 27, 2022, 14:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.