விண்ணை முட்டும் விமான டிக்கெட் விலை; காரணம் என்ன?

Flight ticket fare increase from Chennai to small towns: தேவை அதிகரிப்பு மற்றும் செயல்பாட்டு செலவு அதிகரிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறிய நகரங்களுக்கு இடையேயான விமானம் பயணத்திற்கான கட்டணம் அதிகமாக உள்ளது.

கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையிலும், ராஞ்சி, போபால், விசாகப்பட்டினம், சூரத், பாட்னா, சண்டிகர் மற்றும் சில இடங்களுக்கு நேரடி விமானங்களில் ஒரு வழிக் கட்டணம் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் ரூ.10,000 க்கு அருகில் உள்ளது.

டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், பல சிறிய நகரங்களுக்கு ஒரு நாளைக்கு 1-2 நேரடி விமானங்களை மட்டுமே விமான நிறுவனங்கள் இயக்குகின்றன. இதனால், ஜூன் மாதம் முதல் வாரத்தில் போபாலுக்கு ரூ.7,000, ராஞ்சிக்கு ரூ.8,300, சண்டிகருக்கு ரூ.10,000, சூரத்துக்கு ரூ.7,700, அகமதாபாத்துக்கு ரூ.9,000, பாட்னாவுக்கு ரூ.8,900 என விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும் போது அதிகபட்ச வருவாயை ஈட்டுவதற்காக அதிக பேண்டில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்தாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.

“பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை நிச்சயமாக சராசரியை விட அதிகமாக உள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிக எரிபொருள் விலையால் விமான நிறுவனங்களும் செலவுகளை அதிகரித்து வருகின்றன,” என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் விலை ரூ.1.27 லட்சமாக உள்ளது.

கோடை விடுமுறை என்பதால் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரபலமான வெளிநாட்டு சுற்றுலா தலங்களுக்கு விசா பெறுவதற்கு போதிய நேரமின்மை காரணமாக மக்கள் உள்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை விடுமுறையில் செல்கின்றனர். இதனால் உள்நாட்டு விமான பயணத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கடைசி நிமிட புக்கிங் செய்வது கடினமாகிவிட்டது. ஸ்ரீநகரில் இருந்து சென்னைக்கு ஒரு வழி டிக்கெட்டு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பதிவு செய்த போது கட்டணம் ரூ.30,000 ஆக உள்ளது. ஜூன் அல்லது ஜூலையில் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது, என விமான டிக்கெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: விறுவிறு பணிகள்! நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை 2023க்குள் தயாராகும்!

விமானக் கட்டணத்தில் ஒரு வரம்பை உறுதி செய்யக்கூடிய பிராந்திய இணைப்புத் திட்டம், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு தொடங்கப்படவில்லை. சென்னை-சேலம் விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. சர்வதேச பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக சென்னையிலிருந்து பெருநகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் விலை அதிகமாக இருந்து வருகிறது.

எனவே, இந்தக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடிக்கடி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.